எதிர்வரும் 21 ஆம் திகதி அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவு வழங்கப்படும் – நிதியமைச்சின் செயலாளர்!

Tuesday, May 18th, 2021

அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு, எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொவிட் பரவல் நிலைமையால் விதிக்கப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு, சிங்கள – தமிழ் புத்தாண்டு முன்னதாக வழங்கப்பட்டமை ஆகிய காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: