எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Friday, September 16th, 2022

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதேவேளை அரச பொது விடுமுறையாக எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒருநாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 19 ஆம் திகதி சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: