எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் – பேராயர் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்து சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரும் பொது பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் வகையில், அவரையும், ஏனைய ஆயர்களையும், அருட் தந்தையர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு தாம் தயார் என்பதை கர்தினாலுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உளவுத்துறை அதிகாரிகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை ஊடகங்களுக்காகவே எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவரை நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக உரையாற்றுமாறு கூறுங்கள். இவர் உரையாற்றுவது ஊடகங்களுக்கே ஆகும்.
ஊடக கலந்துரையாடலை நடத்தி அதில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|