10 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை – ஆட்பதிவு திணைக்களம்!

Tuesday, December 5th, 2017

நாட்டின் மொத்த சனத்தொகையில் பத்து லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது என தேசிய ஆட்பதிவு திணைக்களம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது

பத்து இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டையோ அல்லது வேறு அத்தியாவசிய ஆவணங்களோ கிடையாது என தெரிவிக்கப்படுகிறது இதில் ஏழு லட்சம் பேர் வயோதிபர்கள் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்

குருணாகல் மாவட்டத்தில் மட்டும் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத 80000 பேர் உள்ளனர் என தெரியவந்துள்ளது அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிலைமை நீடித்து வருகின்றது, முதியவர்கள் அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும், நடமாடும் சேவைகள் ஊடாக அவர்களிடம் சென்று தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்

Related posts: