வவுனியா மாட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு – ஈ.பி.டிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் இக்கட்டான நேரங்களில் எவரும் பாதிக்கப்பட்டாத வகையில் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தாக்கத்தினால் மக்கள் சொல்லொணா துயரத்தினை அனுபவித்து வரும் இந்த நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள, அரசாங்கம் சில விதிமுறைகளோடு சில வியாபார நிலையங்களுக்கு அனுமதியளிக்கிறது.

வவுனியா மாவட்டத்தில், இவ் அனுமதியை பெறவேண்டுமாயின் முதலில் வர்த்தக சங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்ற நடைமுறை இருந்துவந்தது.

இதனால் தாம் பல இன்னல்களை எதிர்கொள்வதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனிடம் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகர்களது நலன்கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அது தொடர்பில் வடக்கின் ஆளுநருடன் கலந்துரையாடி  குறித்த விடயத்தை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி பெறவேண்டுமாயின், வியாபாரிகள் நேரடியாக அவர்கள் வசிக்கும் பிரிவு பிரதேச செயலாளர் ஊடாக அனுமதிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: