மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்புமில்லை  – அரசாங்க தகவல் திணைக்களம்!

Sunday, May 7th, 2017

சில குழுக்கள்  மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தால் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்த குழுக்களின் செயற்பாட்டாளர்கள் மாத்திரம் சேவையில் இருந்து விலகி இருந்தாலும் உரிய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெற்றன.இதன்மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் வழமையான முறையில் பாடசாலைக்குச் சென்றார்கள். நாடு பூராகவும் முறையான விதத்தில் மின்சார விநியோகம் இடம்பெற்றுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகமும் வழமைபோன்று இடம்பெற்றது.

அத்துடன் சுகாதாத்துறையின் அத்தியாவசிய சேவைகளை முறையான விதத்தில் முன்னெடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நாட்டின் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகள் வழமை போன்று வினைத்திறனாக இடம்பெற்றது. நாட்டின் அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க திட்டமிட்டிருந்தாலும் இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கோ அரசாங்க சேவைக்கோ தாக்கங்கள் ஏற்படவில்லையென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜி.ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related posts: