ஊடகவியலாளர் அச்சுறுத்தலின்றி கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு – ஊடகத்துறை அமைச்சர் கருணாதிலக !
Saturday, January 21st, 2017ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஊடக தர்மத்திற்கு உட்பட்டு ஊடகவியலாளர்கள் சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளதார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் தற்போது வெள்ளை வான் கலாச்சாரம் தனி நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளன. எனினும் ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே பதிவாகின்றன.
ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் பற்றிய அறிவு ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமின்றி தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். இல்லாவிடின் அதுவும் ஊடாக அச்சுறுத்தலாகவே அமையும். மக்களை நல்வழிப்படுத்துவது ஊடகங்களின் கடமை ஊடக தர்மத்துக்கு உட்பட்டு அந்தக் கடமையை ஊடகங்கள் நிறைவேற்ற வேண்டும் ஊடகவியலாளர்களின் கல்வித் தகமையை மேம்படுத்தும் பொருட்டு ஊடக கற்கை நெறிகளை கற்பிக்கும் சர்வதேச தரத்திலான கல்வி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என்றார்.
Related posts:
|
|