உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

Friday, January 19th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் 16 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதிவரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலுக்காக தபால் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்கு தபால் திணைக்களம்பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேர்தல் நடத்துதல் வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல்மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: