உலக மலேரியா தினம் இன்று – இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

உலக மலேரியா தினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது. மலேரியாவை ஒழித்த நாடு என்ற வகையில், இலங்கையில் மீண்டும் மலேரியா தலைதூக்குவதை தடுக்கும் நோக்குடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இன்றும் (25) இடம்பெற்று வருவதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்..
2013ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் நேற்று (24) வரையிலும், இலங்கையில் 447 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மலேரியா பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
மலேரியா நோயாளர்கள் மற்றும் மலேரியா பரவியுள்ள நாடுகளுக்குச் செல்வோருக்கு தேவையான மருந்துகள் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மலேரியா நோய் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு ஒரு வருடம் வரை காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலவச இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|