உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல் !

நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள் சில அடங்கிய அறிக்கை ஒன்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் – எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாக உள்ள நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, பரீட்சை அனுமதிப் பத்திரத்துடன் தேசிய அடையாள அட்டையையும் கொண்டுவர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 06 திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள பரீட்சையில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என பரீட்சைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே குறித்த பரீட்சைகள் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 648 நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|