உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேயிலை உரத்தை தேயிலை தொழில்துறையினருக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாய் என்ற குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய மானிய விலையில் உரத்தை வழங்கும்போது தேயிலை உற்பத்தியை மேம்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு ஏக்கரில் மாதாந்தம் 1,350 கிலோ தேயிலை கிடைக்கிறது. குறித்த திட்டத்திற்காக இந்த வருடத்திலும் 1,000 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்ப்பதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நிறுத்தப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து சேவை ஏப்ரல்’ 20 முதல் ஆரம்பம் - அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையி...
வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...
ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...