நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும்  – இந்திய ஜனாதிபதி !

Sunday, March 11th, 2018

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில்  பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related posts: