ஈ – தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!

Monday, March 6th, 2017

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அச்சிடும் பொறுப்பு உரிய விலை மனுக்கோரல் அடிப்படையில் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விலை மனுக்கோரல் குழுவின் பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கோப் குழுவும், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களமும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விசாரணை நடத்தி வரும் நிலையில் அவசரமாக நிறுவனமொன்றுக்கு அச்சிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அச்சிடுவதற்கு 42 ரூபா அறவீடு செய்யப்படும் என விலை மனுக்கோரிய நிறுவனத்திற்கு வழங்காது, 72 ரூபா அறவீடு செய்யும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களை நிறுவனம் பூர்த்தி செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் சர்வதேச தர நிர்ணய சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts: