இலங்கை பணியாளர்களுக்கு விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பு – ஜப்பான் இணக்கம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022

விசேட திறன்களை கொண்ட தொழில் வேலைத்திட்டங்களின் கீழ் விவசாயத்துறையில் நாட்டின் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ சேவைகள் மற்றும் உணவு சேவை துறைகளுக்கு மேலதிகமாக இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

விவசாய கைத்தொழில் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக ஜப்பான் மொழிப் பரீட்சைக்கு மேலதிகமாக தொழில் தகைமை அவசியமாகும்.

17 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தகுதிக்காண் பரிசோதனைகளுக்கான பரீட்சைகள் இணையம் ஊடாக இடம்பெறவுள்ளன.

இதற்கான தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இணையத்தளத்தின் ஜப்பான் தொழில் வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: