ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு நேரடியாக எரிபொருள் – விலைகளும் சடுதியாக குறைப்பு!

Tuesday, October 18th, 2022

ரஷ்யா – இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்

அமைச்சருக்கும் பிரதிப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேம நலன்கள் குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்

இதனிடையே

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் நேற்று இரவு 9 மணிமுதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

அத்துடன் 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: