இடுகாட்டான் இதயமுள்ளவன் – (முகப்புத்தக பதிவு)

Monday, June 19th, 2017

தேசியத் தமிழ் அரசியலில் அமிர்தலிங்கத்தின் பின் ஒரு முற்போக்கான தலைமைத்துவ பண்புடன் யாரும் உருவாக்கப்படவில்லை என்பதைவிட உருவாகியவர்கள் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதே உண்மையானது.

அந்த விளைவின் பலன்தான் இன்றைய வட மாகாணசபை குழப்பங்கள். 2009 வரை தேசிய தமிழ் அரசியலில் பொம்மலாட்ட பாவைகளாக இருந்தவர்கள் தங்களை இயக்கிய நூல் அறுந்த பின் காற்றில் அலைகின்ற பட்டங்கள் போல மாறிவிட்டனர். இன்று உள்ளவர்களில் இந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் யார் என்று கிளைந்து தேடினால் ஒரே ஒருவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. நீண்ட கால அரசியல் அனுபவமும்இ ஆரம்ப கால போராளியுமான டக்ளஸ்க்கு பலமான வாக்குவங்கி வடக்கில் இருக்கிறது. சிங்கள அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளை ஓரளவேனும் உணர்ந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய தன்மை இன்று இவரிடம் மட்டும் தான் இருக்கிறது.

2009 பேரவலத்தின் பின் தன்னை முறையாக தகவமைத்து மகிந்த அரசின் பிடியிலிருந்து வெளியேறி தன் சொந்த சின்னத்தில் யாழில் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கவேண்டும். மக்களின் அழிவுகளுக்கு அரசினையும் விடுதலைப்புலிகளையும் பொறுப்பேற்க அழைத்திருக்கவேண்டும். பின்வந்த காலங்களிலாவது அதை செய்யாமல் அல்லது செய்ய விடாமல் அவர் மீது திணிக்கப்பட்ட அந்த காரணகாரிய தொடர்புகளையாவது களைந்திருக்கவேண்டும்.

அந்த காலம் ஒரு அசாதாரனமானது தான். போகட்டும். இப்போதும் மௌனமாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கையெழுத்திட வேண்டிய தேவை என்ன? ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மாகாணசபையை கலைத்து மீள் தேர்தலை நடத்த கோரியிருக்க வேண்டாமா ? ஒரு தேசிய தமிழ்அரசியல் தலைவராக வெளிப்பட வேண்டாமா ? இது டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம். தவறவிட்டால் அவரது அரசியலுக்கும் விடிவில்லை. தமிழர்களின் அரசியலுக்கும் விடிவில்லை

Related posts:


பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன...
ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது - போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீத...
அரசியலமைப்பின் 21 வது திருத்தத்திற்கு- அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்தன...