புதிய தலைவருக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!
Wednesday, October 4th, 2017இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்னவை நியமித்தமை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ சபைக்கு தலைவர் ஒருவர் இல்லாத காலப்பகுதியினுள் அதன் தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்து சைட்டம் எதிர்ப்பு தொழிற்சங்கமும் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டது.இந்த நியமனம் தொடர்பில் தமது சங்கத்தின் மத்திய செயற்குழு, இன்று கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக மருத்துவ சங்கத்தின் ஊடக பேச்சாளர் மருத்துவர் ஆனந்த அளுத்கே எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் - அமைச்சர் அர்ஜூன
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு...
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் 118 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் - நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப...
|
|