இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!

நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
“யுனிட்டி” என்ற நைஜீரிய கப்பலே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள நைஜீரிய கடற்படை கப்பல் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பதுடன், குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ள கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினர் எற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
பாடசாலைக்கு வரும் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சுற்றிக்கை!
யாழ் மறைமாவட்ட ஆயரிற்கு புதிய பதவி!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் – நிதி இ...
|
|