பாடசாலைக்கு வரும் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சுற்றிக்கை!

Monday, October 3rd, 2016

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு வருகை தரும் பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அது தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கும் சுற்றறிக்கை ஒன்றை மத்திய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையின்படி பெற்றோர் அணியும் ஆடை தொடர்பாக தளர்வு நிலையை கடைப்பிடிப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

தனியார் பாடசாலைகளுக்கு வருகை தரும் பெற்றோர் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக சில அரச மற்றும் தனியார் பாடசாலை நிர்வாகங்களினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தினால், குறிப்பாக பெண்கள் அணிந்து வர வேண்டிய ஆடைகள் என்றும், தடை செய்யப்பட்ட ஆடைகள் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல் பதாகை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

குறிப்பாக, வார்ப்பட்டை மேலுடைகள், குட்டைப் பாவடை மற்றும் கை இல்லாத ஆடைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் வகையில் அந்த அறிவித்தல் பதாகையில் படங்கள் இருந்தன.

இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அது போன்ற அறிவிப்புகளை வைக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு காலையில் அழைத்து வரும் வேளையிலும், வேறு தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் போதும் தங்களுக்கு வசதியான ஆடை அணிந்து வருவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு பெற்றோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கை கூறுகின்றது.

”பிள்ளைகளின் தேவைகளுக்காக பாடசாலைகளுக்கு பெற்றோர் வருகை தரும் போது பாடசாலை ஒழுக்கம் மற்றும் பெற்றோரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடைகளை அணிவதற்கும், உரிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.

பெற்றோரின் ஆடையணிகளை குறிப்பிட்டு அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் அறிவித்தல்கள் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்” என பாடசாலை அதிபர்களுக்கு அந்த சுற்றறிக்கையில் மத்திய கல்வி அமைச்சு செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

_91495677_students09

Related posts: