இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019

இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தமிழக கடலோர பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடலுார் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கடர்கரையோர பகுதிகள் மற்றும் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுார் தேவனாம்பட்டினம், கடலுார் துறைமுகம், சோனங்குப்பம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேக நபர்கள், மர்ம படகுகளின் நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கடலோர பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்  எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடம் ஆகியவற்றிலும் போலீசார் பாதுகாப்புக் காக நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

Related posts: