இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்- தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை!

Wednesday, June 16th, 2021

இலங்கையில், ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதை தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த கொவிட் நிலவர அறிக்கைக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கமைய, ஜுன் மாதம் முதலாம் திகதி அறிக்கையின்படி, ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 548 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது 10 ஆயிரத்து 363 ஆக உயர்வடைந்திருந்தது.

இதேநேரம், இந்தியாவில் ஜுன் மாதம் முதலாம் திகதி ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரதத்து 225 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றையநாள் வரையில், இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: