இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்!

Sunday, January 29th, 2023

யாழ்ப்பாணத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார் .

மேலும் தெல்லிப்பளை மற்றும் வசாவிலானில் விடுவிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அடையாளம் கண்டு வருவதாகவும் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காணி விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு - மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அ...
அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானியும் ஜனாதிபதியால் வெளியீடு!