அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியும் ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, March 14th, 2023

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு சார்ந்த சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி முன்னதாக ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: