லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு!

Friday, April 15th, 2022

லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான எரிவாயு விநியோகஸ்தரான Litro Gas Lanka நிறுவனம் அண்மைக்காலமாக, எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு மற்றும் உற்பத்திப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு, கடந்த 2021 ஜூலை 26 இல் தலைவராக பொறுப்பேற்றபோது அந்நிறுவனம் பல்வேறு ஊழல் மோசடிகள் நிறைந்ததாக காணப்பட்டதாகவும், அதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்க தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெஷார ஜெயசிங்கவை, கடந்த ஜனவரி 13 ஆம் திகதி நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவினால் பதவி நீக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர் அன்றையதினமே மீண்டும் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

குறித்த தினத்தில் லிட்ரோ எரிவாயு முனையம் மற்றும் களஞ்சிய நிலையங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் - சுகாதார அமைச்சு அறிவிப...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீ...
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி...