சதொச விற்பனையகங்கள் ஊடாக ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!

Saturday, October 8th, 2022

சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கு 395 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 398 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோ ஒன்று 174 ரூபாவிற்கும் சம்பா அரிசி கிலோ ஒன்று 220 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுதவிர, ஒரு கிலோகிராம் கடலை 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: