தொடர்ந்து முடங்கும் உலக நாடுகள்: ஒபெக் அமைப்பு எடுத்துள்ள அதிமுக்கிய தீர்மானம்!

Monday, April 13th, 2020

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக கேள்வி குறைந்த நிலையில் இதுவரை காலம் இல்லாத அளவில் எரிபொருட்களின் உற்பத்தியை 10 வீதமாக குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் முடிவெடுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற காணொளி கலந்துரையாடலின் போதே இதற்கானகான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முடிவு இன்னும் ஒபெக் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் அமெரிக்க ஜனாதிபதி, குவைத்தின் சக்தி வள அமைச்சர் மற்றும் சவுதியின் சக்தித்துறை அமைச்சர் ஆகியோர் இதனை உறுதி செய்துள்ளனர்.

அந்தவகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் பிரகாரம் நாளொன்றுக்கு 9.7 மில்லியன் பீப்பாய் எரிபொருள் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகளும் அதன் இணை நாடுகளும் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: