உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது!

Sunday, March 20th, 2022

உக்ரைனின் மேற்குபகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கொன்றை அழிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஸ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இதுவரை எந்ததகவல்களையும் வெளியிடா நிலையிலேயே முதல்தடவையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான தாக்குதலில் முதல்தடவை கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஸ்ய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஹைப்பர்சோனிக் ஏரோபலிஸ்டிக் ஏவுகணைகளுடன் கூடிய கின்சல் ஏவுகணை அமைப்பு இவானோ பிரான்கிவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உள்ள டெலியாட் கிராமத்தில் ஏவுகணைகள் வெடிமருந்ததுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்;சியத்தை அழித்துள்ளது என ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்க மேலும் அதி நவீன வசதிகள் பெற்றுத்தரப்படும் - பாதுகாப்பு செயலாளர் தெ...
சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...