குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!

Tuesday, November 1st, 2016

குமாரபுரம் பகுதியில் 24 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் அறுவர் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அறுவரை விடுவித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்தநிலையில் இதற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என, கூறப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளால் குறித்த குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அறுவரையும் விடுவித்தமை மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த மனுவை 22ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

1940185957Courts

Related posts: