கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை– GMOA.

Tuesday, April 11th, 2017

மாலபே, சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவுகளை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நிராகரித்து விட்டதாக, அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA), இலங்கை அரசாங்க மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள், மருத்துவபீட ஆசிரியர் சங்கங்கள் ஆகியன இணைந்து, ஜனாதிபதிக்குக் கையளித்த முன்மொழிவுகளின் அடிப்படையில், சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லாவிடின் தொழிற்சங்கங்களின் கூட்டுகளுடன் இணைந்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்றார்.

இந்த முன்மொழிவுகளானவை,

  1. பட்டமொன்றை வழங்கும் நிறுவனமாகுவதற்கு அத்தியாவசியமான ஏற்புடைமை சான்றிதழை சைட்டம், இலங்கை மருத்துவ சபையிடமிருந்து பெறவில்லை என உயர் கல்வி அமைச்சர், நீதித்துறைக்கு அறிவித்தல்.
  2. சைட்டம் மாணவர் அனுமதியை நிறுத்துதல்.
  3. மருத்துவக் கல்விக்கான குறைந்த தராதரத்தை வரத்தமானியில் பிரசுரித்தல்.
  4. சைட்டம் மாணவர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி, ஒரு குழுவை அமைத்தல்.
  5. இந்தத் தீர்வை இலங்கை மருத்துவ சபை ஏற்றல்.

இதேவேளை, தனியார் மருத்துவக் கல்லூரிகள் உட்பட இலங்கை மருத்துவக் கல்வி, ஆகவும் குறைந்த தரத்தைப் பேணுவதாக இலங்கை மருத்துவ சபை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: