நல்லாட்சிக்கு முண்டுகொடுத்தவர்கள் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியுமா? ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் சவால்!

Sunday, July 19th, 2020

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்குடன் இணக்க அரசியலூடான அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அரசியலுரிமை என்ற மூன்று விடயத்தையும் வலியுறுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்காகவே செயற்பட்டு வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பளை நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

30 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த யுத்தத்தால் எமது மக்கள் சொல்லெணா துன்ப துயரங்களை அனுபவித்து வந்திருந்தனர். அதன்பின்னர் யுத்தம் நிறைவு பெற்றபின்னரும் எமது மக்கள்  தடுப்பு முகாம்களிலும் உடலூனங்களால்லும் பரிதவித்திருந்த நிலையில் எமது தலைவரது இணக்க அரசியலூடாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை விடுவித்து சமூகத்தில் வாழ்வதற்கு வழிவகை செய்திருந்தோம்.

அதுவும் இன்றைய ஜனாதிபதியும் அன்று பாதகாப்பு செயலாராக இருந்த கோட்டபய ராஜபக்சவிடம் எமக்கு இருந்த இணக்க அரசியலால் செய்துகாட்டியிருந்தோம்..

தமிழ் மக்களது உரிமைக்காக எந்துவிதமான எதிர்பார்புமில்லாது போராடியவர்கள் இன்று எதுவுமற்ற நிலையில் வறுமையில் திண்டாடுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் இவர்களை வைத்து வாக்குகளை பெற்றவர்கள் இன்று இவர்களை பற்றி சிந்திப்பது கிடையாது.

அன்றைய மஹிந்த ராஜகன்ச ஆட்சியில் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதில்தான் நாமும் மேலதிகமாக இருந்துகொண்டு இத்தனை தேவைப்பாடுகளையும் செய்திருந்திருக்கின்றோம்.

ஆனால் நல்லாட்சியில் கூட்டமைப்பினர் அந்த ஆட்சிக்கு  முண்டுகொடுத்து மட்டுமல்லாது  எமது மக்களை அவர்களது அபிலாசைகளை எல்லாம் பூண்டோடு பேரம்பேசியும் விற்றுவிட்டனர்.

ஆனால் நாம் தெளிவாக சொன்னோம். சொன்னதை செய்தோம். இணக்க அரசியலூடாக நாம் சாதித்தவை ஏராளம். இதில் கிளிநொச்சி மாவட்டம் பல அபிவிருத்திகளை பெற்றுக்கொண்டது.  ஆனாலும் மக்கள் தமது தேவைகளை இன்னமும் பெறவேண்டியவர்களாகவே உள்ளனர்.

அத்துடன் நாம் அதிகாரத்தில் இருந்தபோது என் பணிகள் செய்தோம் என்பதை ஒவ்வொரு அறிவார்கள். ஆனால் கடந்த ஆட்சிக்கு முண்டுகொடுத்த சம்பந்தனோ அன்றி மாவையோ அல்லது சிறீதரனோ தாம் தமிழ் மக்களுக்கு எதை செய்தார்கள் என்பதை காட்டமுடியுமா என்றும் அவர்’ கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் 14 கட்சிகளும் 19 சுயேட்சைக் கட்சிகளுமாக மொத்தம் 33 தரப்பினர் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த 33 தரப்பிலும் வீணைக் கட்சி மட்டும்தான் ஆட்சி பீடத்திலிருந்து மக்களுக்கான பணியை செய்யும் என்பதை நினைவில் கொள்வதுடன் அந்த ஒளிமயமான காலம் ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று வரவுள்ளதால் அதை எமக்கானதாக மாற்றி வெற்றியை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அள்ளிக்கொடுங்கள் என்றும் அவர் மக்களிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: