இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!

Monday, May 6th, 2024

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் நாளை  (07) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடம்பெயர்வு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் உட்பட சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளது. மேலும், இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் 2023இல் தமது 75 வருட இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடியுள்ளன.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது மூலோபாய உரையாடலில், வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பணிப்பாளர் நாயகம் சோபினி குணசேகர தலைமையில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் உள்ளடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் குழுவுக்கு இந்தியப் பெருங்கடல் இயக்கு நகரம் மற்றும் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தலைமையாளர் பென் மெல்லர் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: