மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தரக்கோரிப் போராட்டம்!

Wednesday, February 22nd, 2017

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான மாட்டின் ஜெயா ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை அரச நியமனங்களில் உள்வாங்கக் கோரி, மட்டக்களப்பு, காந்திபார்க்கிற்கு அருகாமையில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் கேள்வியுற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவுக்கு அமைவாக அவரது இணைப்பாளரும், கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான மாட்டின் ஜெயா நேற்று இரவு 9.00 மணியளவில் ஸ்தலத்திற்கு நேரில் விஜயம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், நேற்று காலை முதல் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், தங்களை யாரும் இதுவரை பார்க்க வராதவிடத்து, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியைப் பாராட்டுவதுடன், அவருக்கு நன்றி தெரிவிப்பதற்கும் விரும்புவதாகக் கேட்டுக் கொண்டனர்.

பட்டதாரிகள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் தொடர்பு கொண்ட செயலாளர் நாயகம், அவர்களுடைய போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவு வழங்குவதுடன், இன்று 22.02.2017 நாடாளுமன்றத்திற்கு இவ்விடயத்தை எடுத்துச் செல்வதாகவும் பட்டதாரிகள் மத்தியில் வாக்குறுதியளித்திருந்தார்.

03

02

01

Related posts: