கிளிநொச்சியில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Thursday, January 12th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமடையும் நிலையில் உள்ளமை அவதானிக்கப்பட்டு அதனை தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் டெங்குநோய் கட்டுப்படுத்தும்  செயற்பாடுகள் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

முப்படையினரின் உதவியுடன், சுகாதார துறையினர் ஆகியோர் இணைந்து இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வருடத்தில் 10.01.2017 வரையான காலப்பகுதியில் 14 நோயாளர்கள் டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைபெற்றுள்ளனர். இதனையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதோடு, போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றைய தினம் (10.01.2017) கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராம அலுவலர் 637 வீடுகளில், 236 வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதலின்போது 93 இடங்களில் அபாயகரமான டெங்கு நுளம்பு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 83 இடங்கள் உடனடியாக சுத்திகரிக்கப்பட்டன.

மாவட்டப் பொது வைத்தியசாலை கிளிநொச்சியில் இடம்பெற்ற பரிசோதனையின்போது 15 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கிளிநொச்சி பொதுச்சந்தை, கிளிநொச்சி புகையிரத நிலையம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 12 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

பளை, பூனகரி மற்றும் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 5 பாடசாலைகளில் நேற்றையதினம் டெங்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 15 அரச அலுவலகங்களில் நேற்று இடம்பெற்ற பரிசோதனையின்போது 06 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன. பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 4 அரச அலுவலகங்களில் இடம்பெற்ற பரிசோதனையின்போது 02 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

மேலும் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வுப் பரப்புரை மற்றும் தேடியழிக்கும் நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சியில் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரும் சுகாதார பிரிவினரும் பிரதானமான பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: