இலங்கையில் வருகின்றது இலத்திரனியல் வாக்களிப்பு முறை!

Saturday, September 10th, 2016

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்களிப்பின்போது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கான திருத்தங்கள் நவம்பர் மாதமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நிலையியல் கட்டளைகளில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நிலையியல் கட்டளைகள் தொடர்பான செயற்குழு சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள நிலையியல் கட்டளைகளில் மாற்றம் மேற்கொள்வதற்கான அறிக்கை நவம்பரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்..

கோப் குழு உள்ளிட்ட ஏனைய செயற்குழுக்களின் அமர்வுகளின் போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. ஆயினும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும், ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாயின், நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கூறினார்.

epdpnews.com

Related posts: