யாழ்ப்பாணத்தில் இராணுவம் வெளியேறிய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை – மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மேற்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை சிமெந்து ஆலையுடன் இணைந்தாக இராணுவத்தினரின் ஆயுதக் கிடங்கு அமைந்திருந்தது. அதற்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 30 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த முகாமிலிருந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி இராணுவத்தினர் வெளியேறினர்.

இந்தக் காணிகள் உரிமையாளர்களிடம் எப்போது ஒப்படைக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரனிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது,

“அந்தக் காணிகளை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” – என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தககது

Related posts: