இலங்கையில் தொற்றா நோய்களினால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பு!

Saturday, January 13th, 2024

இலங்கையில் தொற்றா நோய்களினால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தேசிய  தொற்றா நோய்களுக்கான சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில்  இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்களில் புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற மதுபான பயன்பாடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு அளவு ஆகியவை அடங்கும்.

இந்த நிலைமையை தவிர்க்கும் வகையில், பாடசாலை சிற்றுண்டி சாலைகள் மட்டுமன்றி ஏனைய சிற்றுண்டிச்சாலைகளிலும் ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்வதற்கும் பாடசாலை மாணவர்களை உடல் செயற்பாடுகளுக்கு வழிநடத்துவதற்கும்  முறைமை ஒன்றை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இதில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: