கடும் வரட்சி : 4 இலட்சம் பேர் பாதிப்பு!

Saturday, March 31st, 2018

நாட்டின் 9 மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் சுமார் 4 லட்சத்து 36 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளே வறட்சியினால் அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் போதியளவு மழை நீர் கிடைக்காமை காரணமாக பெருமளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஆங்கிலஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் - சாவகச்சேரி மருத்துவமனை பாதை ...
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...