இலங்கையில் சில்லறைகளை வெளியிடும் புதிய ATM!

Thursday, January 18th, 2018

இலங்கையில் சில்லறைகளுக்கு காணப்படும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய வகை ATM இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாணயத்தாள்களுக்கு பதிலாக சில்லறையை வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த இயந்திரம் சில்லறை விநியோகம் புனரமைப்பு மேற்கொள்வதற்காக பொருத்தப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நிதி நிர்வாக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக அதி நவீன நிதி நிர்வாக மத்திய நிலையம் ஒன்றும் நிறுவுவதற்கு மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.

Related posts: