இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் – ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் ஒரே நாளில் பதவாகிய அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவென தொற்று நோயியல் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரொனா தொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 396 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள தொற்று நோயியல் பிரிவு இதுவரை இலங்கையில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளை கையேடாக வெளியிட தேர்தல் ஆணைக்குழு திட்டம்!
யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் - மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!
தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|