இலங்கையிடம் ஆதரவு கோரும் சீனா!

Sunday, July 21st, 2019

சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம் கோரியுள்ளார்.

சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் இலங்கையின் ஆதரவை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் ஷெங் சியூயுவான் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தில் சித்திரவதைத் தடுப்பு முகாம்களை சீன அரசாங்கம் அமைத்திருப்பதாகவும், உய்குர் இனத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் ஷெங் சியூயுவான் மறுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேற்குலக நாடுகளில் சில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சின்ஜியாங்கில் சீனா கடைப்பிடிக்கும் கொள்கை மீது தொடர்ச்சியாகத் தாக்குதலை மேற்கொள்வதை அவதானிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

அந்த மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மனித உரிமைகள் மீறப்படுவதாகப் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஒத்துழைப்பைப் பலப்படுத்தவும், இரு நாடுகளினதும் வெவ்வேறுபட்ட இன,மதக் குழுக்களுக்கிடையிலான பரிமாற்றங்களுக்கும் அமைதி, சமாதானத்தைப் பேணுவதற்கும் சீனாவுடன் இணைந்து பாடுபடுமாறு இலங்கைக்கு சீனத்தூதுவர் அழைப்பு விடுத்தார்.

Related posts: