2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Saturday, January 7th, 2023

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கல்வி அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே பரீட்சைக்கான இறுதி திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய, வகுப்புகள், கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்த, எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அரச பாடசாலைகளுக்கான இலவச பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, 300க்கும் அதிக வகையான பாடப் புத்தகங்களின், 43 மில்லியன் பிரதிகள் அச்சிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய கல்வி ஆண்டுக்காக குறித்த பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் எதிர்ப்பார்ப்பில் அவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: