பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் – அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

QR Code உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் நாட்டில் 28 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: