இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்கும் சவுதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!

Monday, August 29th, 2022

சவுதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நட்பு நாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும், அவற்றை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: