இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் – வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கை!

Wednesday, August 18th, 2021

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றுமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதனை நிறுத்துமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார வழிகாட்டியில் சுட்டிகாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்’கது..

000

Related posts: