இத்தாலியாக மாறக்கூடாது : இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி!

Thursday, March 26th, 2020

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் ஏதேனும் ஓர் வழியில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கண்டறியப்பட்ட நோயாளி யாருடன் தொடர்பு பேணியுள்ளார் என்பது குறித்து ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், இலங்கை இத்தாலியாக மாறுவதனை விரும்பாத காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: