மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 667 பேர் மேன்முறையீடு!

Monday, September 12th, 2016

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 667 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்க  தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1017 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித படுகொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றினால் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை கைதிகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் உடற் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் எனவும், கிரிக்கெட் அல்லது வேறும் ஏதேனும் விளையாட்டு உடற்பயிற்சியில் ஈடுபடவும், உடற் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதற்கும் அனுமதியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, வாரத்தில் ஒரு நாள் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க இடமளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1977ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

asd1

Related posts: