நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021

நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகம் அடையாளம் காணப்படுவதை அடுத்தே இந்த எச்சரிக்கையை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) விடுத்துள்ளது.

2021 நவம்பர் 4ஆம் திகதிக்குள் இலங்கையில் 22 ஆயிரத்து 902 டெங்கு தொற்றாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்களில் 504 பேர் இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் பதிவாகியுள்ளனர்.

கோவிட் தொற்றுநோயிலிருந்து நாடு படிப்படியாக மீண்டு வரும் நிலையில், டெங்கு நோயைத் தடுக்க வேண்டும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இல்லையெனில் பாரிய அழிவு ஒன்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அந்த பிரிவு எச்சரித்துள்ளது.

தண்ணீர், சேமிப்பு தொட்டிகள், பூந்தொட்டிகள், மற்றும் குவளைகள், தோட்ட நீரூற்றுகள், குளிர்சாதன பெட்டிகள், தண்ணீர் வழங்கும் தட்டுகள், உடைந்த தொட்டிகள், தூக்கி எறியப்பட்ட போத்தல்கள், வீசப்பட்டுள்ள ரப்பர் சில்லுகள், தேங்காய் ஓடுகள் அனைத்தும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாகும்.

எனவே இந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: