ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அத்துடன் சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக சந்திப்பின்போது மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சக்திமிக்கதும் சாதகமானதாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அபிவிருத்தியுடன் இறைமை மற்றும் சுயாதீன தன்மையுடைய நாடாக இருக்க வேண்டும். இலங்கைக்கு இடையிலான பொருளாதாரத்தை பலமாக்குவது தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும். பாதுகாப்பு ஆதரவு தொடர்பாக முழுமையாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிப்படையான வர்த்தகம், முதலீட்டின் அடிப்படையிலான பொருளாதார பங்காண்மை மற்றும் தொற்றுப்பரவலின் பின்னரான பொருளாதார மீட்சியின் முக்கிய அங்கங்கள் என்பன குறித்தும் அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: