அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Monday, July 17th, 2023

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நலன்புரி கொடுப்பனவுகளை பெற தகுதி பெற்ற குடும்ப பிரிவுகளில் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு இந்த மாதம்முதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதன்படி, ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகளை சமர்ப்பித்தவர்களுக்கு ஜூலை மாத கொடுப்பனவை ஆகஸ்ட் மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நலன்புரி கொடுப்பனவு தொடர்பிலான மேல்முறையீடுகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகமாகவுள்ளதுடன், அவற்றில் 6 லட்சத்து 50 ஆயிரம் மேன்முறையீடுகள் ஏற்கனவே நிவாரண திட்டத்தில் பதியப்பட்ட குடும்பங்களால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: