எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பத்தப்படக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையாகும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் என்பனவற்றுக்கு மத்தியில், இந்த அனுமானத்திற்கு வரமுடியும் எனவும் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நாட்டில் நேற்றையதினம் 2,584 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் 2,572 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 861 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 29,747 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 789ஆக அதிகரித்துள்ளது.

Related posts: